ஐரோப்பா முழுவதும் விற்பனை செய்யப்படும் நூற்றுக்கணக்கான அழகுசாதனப் பொருட்களில் அபாயகரமான, தடைசெய்யப்பட்ட இரசாயனங்கள் இருப்பதாக ஐரோப்பிய இரசாயன நிறுவனம் (ECHA) தெரிவித்துள்ளது.
பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியை தளமாகக் கொண்ட நிறுவனம், 13 ஐரோப்பிய நாடுகளில் கிட்டத்தட்ட 4,500 அழகுசாதனப் பொருட்களை ஆய்வு செய்துள்ளது.
இவற்றில் ஆறு சதவீத தயாரிப்புகள் அல்லது 285 தயாரிப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் காரணத்தால் தடைசெய்யப்பட்ட இரசாயனங்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அபாயகரமான இரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகளில் ஐலைனர்கள், லிப்-லைனர்கள், கண்டிஷனர்கள் மற்றும் ஹேர் மாஸ்க்குகள் ஆகியவையும் அடங்கும்.
இந்த இரசாயனங்களின் பயன்பாடு கருவுறுதலைக் குறைக்கும், புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ECHA சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த ஆய்வுகளுக்கு பின்னர், அபாயகரமான இரசாயனங்களுடன் ஐரோப்பிய சந்தையில் காணப்படும் அழகுசாதனப் பொருட்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, பின்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லிச்சென்ஸ்டீன், லித்துவேனியா, லக்சம்பர்க், மால்டா, நோர்வே, ருமேனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளின் இவற்றின் பயன்பாடுகள் காணப்படுகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.