”மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் இன்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பத்தும் கேர்ணல் தெரிவித்துள்ளார்.
அவிஸாவலை பகுதியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாடாளுமன்றில் அங்கம் வகித்த உறுப்பினர்களில் சுமார் 60 ஓய்வுபெற்றுள்ளதாக தெரிகின்றது. ஓய்வுபெறும் வயதினை அடையாதுள்ள பலரும் தமது ஓய்வினை அறிவித்துள்ளனர்.
அதேபோல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பொதுமக்கள் மேலும் சுமார் 75 பேருக்கு ஓய்வினை வழங்குவார்கள் என்றே தெரிகின்றது. நாட்டில் தற்போது பிரதான அரசியல் கட்சிகளின் பாரியளவிலான பிரசாரக்கூட்டங்களை காண்பது அரிதாகவே உள்ளது.
மக்களை எதிர்கொள்ளமுடியாதவர்கள் இன்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு தயங்குகின்றனர்.மக்கள் முன்செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர் அதனாலேயே இம்முறை தேர்தல் பிரசாரங்களும் குறைவடைந்துள்ளன” இவ்வாறு பத்தும் கேர்ணல் தெரிவித்துள்ளார்.