”நாட்டில் கடந்த காலங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்தல் மற்றும் ஊழலை ஒழிப்பதே தமது கொள்கை திட்டமாகும்” என ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
மாத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் சிறந்ததொரு மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடிய மற்றும் நன்கு சிந்தித்து செயற்படக்கூடிய இளம் உறுப்பினர்களே எமது கட்சியில் உள்ளனர். புதிதாக சிந்திக்ககூடிய முதலீட்டாளர்கள் எமக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர்.
நாட்டின் பொருளாதாரக்கொள்ளையர்கள் மத்திய வங்கிகொள்ளையர்கள். தேங்காய் எண்ணெணை வெள்ளைப்பூண்டு கொள்ளையர்கள். தடுப்பூசிகொள்ளையர்கள என பலவகையான கொள்ளையர்கள் எமது நாட்டில் உள்ளனர்.
இவ்வாறு மோசடியாளர்களை கைது செய்வதே எமது கட்சியின் கொள்கையாகும் ஊழலற்ற தூய அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார கொள்ளையர்கள் அதேபோல் இனவாதங்களை ஏற்படுத்தி அரசியலை முன்னெடுப்பவர்களே உள்ளனர்.அவ்வாறானவர்களே ஊடக சந்திப்புக்களை நடத்தி நாட்டில் மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர.
அதாவது ஐக்கிய ஜனநாயகக்குரலை முடக்குவதற்கு இன்று பலர் முயற்சிக்கின்றனர். அவ்வாறானவர்கள் இன்று என்மீது சேறுபூசும் நடவடிக்ககைளை முன்னெடுத்துள்ளனர்.எமக்கு பல நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர் நாம் ஊழல்வாதிகள் அல்ல என்பதனாலேயே எமக்கு ஆதரவளித்துவருகின்றனர்.
கறுப்பு பணம் ஈட்டுபவர்களே எமக்கு ஆதரவு வழங்குவதாக தற்போது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.ரஞ்சன் ராமநாயக்க ஊழல்வாதியல்ல நேர்மையானவர் என்பதனாலேயே முதலீட்டாளர்கள் எமது கட்சிக்கு ஆதரவு வழங்கிவருகின்றனர். நான் இந்த இடத்தில் ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன்.முதலீட்டாளர்களை முடக்குவதற்கு எவரும் முயற்சிக்க கூடாது ஏனெனில் எமது நாடு வறுமையில் உள்ளது. எமது நாட்டை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு முதலீட்டாளர்களிள் தேவை காணப்படுகின்றது. கறுப்பு பணம் ஈட்டும் முதலீட்டாளர்களுடன் நாம் தொடர்பு வைத்திருக்கவில்லை” இவ்வாறு ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.