பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பத்தரமுல்லை செஸ்திரிபாயவிலுள்ள அமைச்சுக் காரியாலயத்தில் தனது பிரதியமைச்சுக் கடமைகளை இன்று உத்தியோகபூர்வமாக பொறுபேற்றுக் கொண்டார்.
இதன்போது பெருந்தோட்ட மக்கள் 200 வருட காலம் அனுபவித்து வந்த பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி தொழிலமைச்சர் மஹிந்த ஜெயசிங்க, அமைச்சின் அதிகாரிகள், ஊழியர்கள், பிரதியமைச்சரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.














