தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையால் நில்வலா கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இதனால், பாணடுகம மற்றும் தல்கஹகொட பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுமென நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேலும், அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும், வடமத்திய மாகாணத்தின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாளை (25) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை பல ஆற்றுப்படுகைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கீழ்க்கண்ட ஆற்றுப்படுகைகளில் உள்ள மக்களும் அப்பகுதிகளின் ஊடாக பயணிக்கும் பயணிகளும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மல்வத்து ஓயா
கலா ஓயா
கனகராயன் ஆறு
பரங்கி ஆறு
மா ஓயா
யான் ஓயா
மகாவலி ஆறு
மதுரு ஓயா
கல் ஓயா
வெலி ஓயா