தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் புதன்கிழமை (04) காலை 5.3 ரிச்டெர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காலை 7:27 மணியளவில் நிலநடுக்கம் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால்,உயிர்சேதம் அல்லது பெரிய சேதம் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.
வரலாற்று ரீதியாக, தெலுங்கானா பல நில அதிர்வு நடவடிக்கைகளை சந்தித்துள்ளது.
எனினும் இந்த அளவு நிலநடுக்கங்கள் அசாதாரணமானது.
இறுதியாக 2020 ஏப்ரல், ராமகுண்டத்திற்கு வடக்கே 4.8 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.