இனவாத செயற்பாடுகளை மகிந்த முன்னெடுத்தமையே தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிரதான காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே தயாசிறி ஜெயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” நாட்டில் ஒழுக்கத்துடன் செயற்பட்டால் வெற்றி கிடைக்கும்
அதற்கு சிறந்த உதாரணம் தேசிய மக்கள் சக்தியே. மூன்று நாடாளுமன்ற உறுப்பினருடன் நாடாளுமன்றத்தில் இருந்த ஜேவிபி இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இதில் அமைச்சு பதவிகளை வகிக்கின்ற அனைவருக்கும் நான் வாழத்துக்களை தெரிவிக்கின்றேன்.
எமது நாட்டில் கடந்த காலத்தில் அதிகாரம் செய்த கட்சிகள் அனைத்தும் இன்று அழிந்து போயுள்ளன.
பழைய அரசியல் காலாசாரம் என்பன அழிந்து விட்டன.
இதற்கு காரணம் தனிப்பட்ட நலன்களை மாத்திரம் முன்னெடுத்த அரசியல்வாதிகள்தான். கடந்த கால அரசியல் கட்சிகள் அனைத்தும் தமது குடும்பங்ளை வளர்த்து எடுக்கவே பாடுபட்டுள்ளன. எவையும் மக்களுக்காக செயற்படவில்லை. தேசிய மக்கள் சக்திக்கு எவ்வாறு பாரிய மக்கள் ஆணை கிடைத்தது.
சிந்தித்து பாருங்கள்.
2009 ஆம் ஆண்டு யுத்ததை மகிந்த வென்றபோது நான் ஒருவிடயத்தை கூறினேன். ஆனால் மகிந்த அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நாட்டில் இனவாத கருத்துகளை முன்வைத்து அரசியல் செய்பவர்களுக்கு ஒருபோது இடமளிக்ககூடாது என நான் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.