2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 2024 டிசம்பர் 07 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த நவம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும், பாதகமான காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு, காலக்கெடுவை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக IRD அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோர் புதிய காலக்கெடுவுக்குள் அல்லது அதற்கு முன்னதாக கணக்கை சமர்ப்பித்தால் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்றும் திணைக்களம் குறிப்பிட்டது.
வருமான வரி அறிக்கைகள் அதன் ஆன்லைன் அமைப்பு மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று IRD கூறுகிறது.
மேலும் தொழில்நுட்ப ஆதரவு தேவைப்படுபவர்கள் தலைமை அலுவலகம், பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களிலிருந்து தேவையான உதவியைப் பெறலாம்.