ஹூண்டாய் மோட்டாரின் (Hyundai Motor’s) தொழிற்சங்கம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலா நான்கு மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்க செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை (04) தெரிவித்தார்.
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலகாவிட்டால், டிசம்பர் 11 முதல் முழு வேலைநிறுத்தத்தைத் தொடங்க ஹூண்டாய் மோட்டார் தொழிற்சங்கம் அங்கம் வகிக்கும் தென் கொரியாவின் உலோகத் தொழிலாளர் சங்கம் திட்டமிட்டுள்ளதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
தென்கொரிய சட்டமன்றத்தில் இராணுவச் சட்டமூலம் செவ்வாய் (03) அன்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதி யூன், பதவி விலகல் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் குழுக்களிடமிருந்து எதிர் கொண்டார்.
இந்த பின்னணியில் ஹூண்டாய் மோட்டாரின் மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.
திட்டமிட்ட செயல்கள் அல்லது செயல்பாடுகளில் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்து ஹூண்டாய் மோட்டார் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.