ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்தார்.
இது தொடர்பான விவாதம் இன்று (04) காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
இதேவேளை, கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் இன்று (04) நடைபெறவுள்ளது.
இதன்படி இன்று மாலை 05.30 மணி முதல் இரவு 09.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.