ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா (Renuka Perera) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்தையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்தே அவர் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.