இன்று முதல் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும்.
கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு நேற்று அரிசி மற்றும் தேங்காய் விநியோகம் செய்யப்பட்டதாக அதன் தலைவர் சமித்த பெரேரா தெரிவித்தார்.
இதன்படி, ஒரு வாடிக்கையாளருக்கு 05 கிலோ நாட்டு அரிசி மற்றும் 03 தேங்காய்களை ஒரே நேரத்தில் வழங்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.