மேற்கு வங்கம் அருகே துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை டாக்கா நிலைநிறுத்தியுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, பங்களாதேஷ் எல்லையில் இந்தியா கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், எல்லைப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்திய எல்லைக்கு அருகில் பைரக்தார் TB2 ஆளில்லா விமானங்கள் (நிலைநிறுத்தப்படுவது குறித்த அறிக்கைகளை இராணுவம் சரிபார்த்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஆளில்லா விமானங்கள் உளவுத்துறை, கண்காணிப்பு, உளவுப் பணிகளுக்காக பங்களாதேஷின் 67 ஆவது இராணுவத்தால் இயக்கப்படுகின்றன.
பங்களாதேஷ் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இவற்றை இயக்குவதாக கூறினாலும், அத்தகைய மேம்பட்ட ட்ரோன்களை ஒரு முக்கியமான பகுதியில் நிலைநிறுத்துவதன் அவசியம் குறித்தும் கேள்விகள் எழுப்பபட்டுள்ளன.
ஹசீனாவின் ஆட்சிக் காலத்தில் ஒடுக்கப்பட்ட தீவிரவாதக் குழுக்கள், தற்சமயம் இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பகுதிகளில் மீண்டும் எழுந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பங்களாதேஷில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை பயன்படுத்தி பயங்கரவாத குழுக்களும், கடத்தல் வலையமைப்புகளும் இந்தியாவுக்குள் ஊடுருவி வருவதாகவும் அது குறிப்பிடுகின்றன.