தேங்காய் விலையை 220 முதல் 230 ரூபா வரையில் வர்த்தகர்கள் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கொழும்பு, கண்டி, இரத்தினபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள வர்த்தகர்கள் தேங்காய்களை தங்களுடைய விலைக்கே விற்பனை செய்வதாகவும் நுகர்வோர் கூறுகின்றனர்.
தேங்காய் விலை உயர்வால், புத்தாண்டுக்கு பால்சோறு சமைப்பது கூட பிரச்னையாகி விட்டதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சில பகுதிகளில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதாகவும் நுகர்வோர் முறைப்பாடு செய்துள்ளனர்.
தேங்காய்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் தலையிடாதது ஏன் என நுகர்வோர் கேள்வி எழுப்புகின்றனர்.