கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வருமான அறிக்கை தொடர்பான விபரத்தை தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ளது.
வருமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 6 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலில் போட்டியிட்ட 1,042 பேர் வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆணையகம் கூறியுள்ளது.
தேர்தலில் 8,888 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த வேளையில், அதில் 7,846 வேட்பாளர்கள் மட்டுமே வருமானம்-செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.