குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களில் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் பெரும்பாலான நாட்கள் முடங்கியிருந்தன
இந்நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கட்சி ரீதியாக பாரபட்சமாக செயல்படுவதாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கிடுவதாகவும் கூறி அவர் மீது இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.