கண்டி, பல்லேகலயில் நடைபெற்று வரும் லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளர் டிசம்பர் 16 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான இந்தியப் பிரஜை இன்று (13) காலை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்தனர்.
மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவருக்கு ஆட்ட நிர்ணயம் தொடர்பில் சந்தேகநபர் யோசனை ஒன்றை முன்வைத்திருந்த நிலையில், அது குறித்த வீரர் ஐசிசிக்கு தகவல் வழங்கியதையடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.