வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”தாம் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், புதிய அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.