ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது அரசுமுறை விஜயமாக நாளை புதுடெல்லிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தியத் தலைநகரில் இடம்பெறவுள்ள வர்த்தக நிகழ்வொன்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.