தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக இராணுவச் சட்டத்தை அறிவித்த ஜனாதிபதி யுன் சியோக் யோலின் பதவி நீக்கம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதியின் கட்சியின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறியதால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியாத காரணத்தினால் முன்னைய பதவி நீக்கம் தோற்கடிக்கப்பட்டது.
இதில் வெற்றி பெற வேண்டுமானால், தென் கொரிய ஜனாதிபதி தேசிய சட்டமன்றத்தில் உள்ள 300 உறுப்பினர்களில் 200 பேரின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.