கண்டி வில்லியம் கொபல்லாவ மாவத்தையில் இன்று (16) காலை கெட்டம்பேயிலிருந்து கண்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று சிறிய ரக லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் தந்தையும் காயமடைந்துள்ளார்.
17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். சிறுமியின் சடலம் கண்டி தேசிய வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.