நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கேன் வில்லியம்சன் (Kane Williamson) தனது 33 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக ஹாமில்டனில் உள்ள செடான் பார்க்கில் நடைபெற்று வரும் மூன்றாவது நாளில் நியூஸிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸின் போது வில்லியம்சன் 156 ஓட்டங்களை எடுத்தார்.
186 இன்னிங்ஸ்களில் 33 சதங்களை அடித்தன் மூலமாக நியூஸிலாந்து துடுப்பாட்ட நட்சரத்திரம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் வேகமாக மூன்றாவது வீரர் ஆனார்.
194 இன்னிங்ஸில் 33 சதங்களை எடுத்த யூனிஸ் கானை விடவும், 199 இன்னிங்ஸில் 33 சதங்களை எடுத்த ஸ்டீவன் ஸ்மித் மற்றும் குமார் சங்கக்காரவை விடவும் வில்லியம்சன் வேகமாக இந்த சாதனையை எட்டினார்.
ரிக்கி பாண்டிங் 178 இன்னிங்ஸ்களில் 33 ஆவது டெஸ்ட் சதத்தையும், சச்சின் டெண்டுல்கர் 183 இன்னிங்ஸுகளில் 33 ஆவது டெஸ்ட் சதத்தையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.