இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கள்கிழமை (16) சந்தித்துப் பேசினர்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார்.
திங்கட்கிழமை காலை புதுடில்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர்.
ஜனாதிபதி திஸாநாயக்க, ஒன்றிணைந்த பாதுகாப்புப் படையினரால் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி திரௌபதி முர்முவும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ஒருவரையொருவர் அந்தந்த அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.
இலங்கை ஜனாதிபதி, ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாய வரவேற்பு பெறுவதைக் காட்டும் காணொளியை எக்ஸில் பகிர்ந்துள்ளார்..