காலி, ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற நான்கு ரஷ்ப் பிரஜைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, நான்கு வெளிநாட்டவர்களில் உயிரைக் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணும், 39 வயதுடைய பெண்ணும், 07, 13 வயதுகளையுடைய இரு சிறுமிகளுமே இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் ஆவர்.
ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஹேவகே, பொலிஸ் கான்ஸ்டபிள் 96793 ஏக்கநாயக்க, பொலிஸ் கான்ஸ்டபிள் 102748 திஸாநாயக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 105456 ஜயசிங்க ஆகியோரால் இந்த உயர்காப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.