இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதன் முதல் 3 டெஸ்ட் போடிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.
3-வது டெஸ்ட் போட்டி Draw என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்துச் செய்தியொன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் ” சென்னை முதல் உலக அரங்கு வரை, தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்திருக்கின்றீர்கள். ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் தாக்கம் என்றென்றும் நினைவில் இருக்கும். ஒவ்வொரு விக்கெட்டிலும், ஒவ்வொரு ஸ்பெல்லிலும், ஒவ்வொரு போட்டியிலும், நீங்கள் விளையாட்டை உயர்த்தி, எண்ணற்ற நினைவுகளை எங்களுக்குக் கொடுத்தீர்கள். உங்களது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! ” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://x.com/Udhaystalin/status/1869598146491494893