பிரான்சின் வெகுஜன பாலியல் வன்புணர்வு வழக்கொன்றில் நபரொருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஜிசெல் பெலிகாட்டின் (Gisele Pelicot) முன்னாள் கணவர் டொமினிக் பெலிகாட், கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக அவருக்கு மீண்டும் மீண்டும் போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்பணர்வு செய்ததற்காக வியாழன் (19) அன்று நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
போதைப்பொருளினால் ஜிசெல் பெலிகாட் சுய நினைவின்றி இருந்த போது, குற்றவாளி பல ஆண்களை வைத்து அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகவும் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை வழங்கிய பிராச்சின் அவிக்னானில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஜர் அராட்டா, டொமினிக் பெலிகாட் தனது மூன்றில் இரண்டு பங்கு தண்டனையை அனுபவிக்கும் வரை பிணைக்கு தகுதி பெற மாட்டார் என்று கூறினார்.
வழக்கில் சம்பந்தப்பட்ட 27 முதல் 74 வயதுக்குட்பட்ட ஏனைய 50 பிரதிவாதிகள் – பிரெஞ்சு வெகுஜன கற்பழிப்பு விசாரணையில், எந்த விடுதலையும் இல்லாமல் நீதிமன்றம் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது.
AFP செய்திச் சேவையின் தகவலின் படி, அவர்களுக்கு 3 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
72 வயதான டொமினிக் பெலிகோட் மூன்று மாத விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார்.
எனினும், 50 பிரதிவாதிகளில் பெரும்பாலோர் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டை மறுத்தனர், அவர்கள் தம்பதியினரால் திட்டமிடப்பட்ட ஒரு சம்மதமான பாலியல் நடவடிக்கையில் பங்கேற்பதாகக் கூறினர்.
எவ்வாறெனினும், ஜிசெல் பெலிகாட்டின் வெகுஜன பாலியல் வன்புணர்வு விசாரணை பிரான்சை அதிர்ச்சிக்குள்ளாக்கியமையும் குறிப்பிடத்கத்கது.