அமெரிக்காவில் மரணமடைந்த பிரபல தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேனின் உடல் சான்பிரான்சிஸ்கோவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் நுரையீரல் பாதிப்பு காரணமாக அமெரிக்கா,சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 16 ஆம் திகிதி காலமானார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மகனான ஜாகிர் உசேன்,தபேலா இசையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது ஜாகிர் உசேன் 4 கிராமி விருதுகளையும் பத்மஸ்ரீ,பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் ஜாகிர் உசேனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ட்ரம்ஸ் சிவமணி தலைமையில் இசை கலைஞர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.