இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழியர் சேமலாப நிதி( EPF) மோசடி வழக்கில் இவ்வாறு அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராபின் உத்தப்பா 2006ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு அவர் கிரிக்கெட் போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது ராபின் உத்தப்பா, செஞ்சுரிஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.