அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கிய காலப்பகுதியில் மொத்தம் 67,000 மெற்றிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனியார் இறக்குமதியாளர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட அரிசியின் கையிருப்பில் இருந்து இறக்குமதி வரியாக இலங்கை சுங்கத்துறைக்கு 430 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று (20) வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் மற்றும் அரச இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்போது, 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 28,500 மெற்றிக் தொன் கச்சா அரிசி எனவும் 38,500 மெற்றிக் தொன் நெல் அரிசி எனவும் சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, நுகர்வோர் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என்று கூறிக்கொண்டு சிறு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் சிலர் பணத்தை மோசடி செய்வதாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.