கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் இன்று (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
U19 மகளிர் ஆசியக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி வெற்றி கொள்வது இது முதன் முறையாகும்.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களை பெற்றது.
2023 இல் தென்னாப்பிரிக்காவில் நடந்த முதல் U19 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் உறுப்பினராக இருந்த கோங்காடி த்ரிஷா 47 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 52 ஒட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
118 என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவரில் 76 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் பந்து வீச்சில் ஆயுஷி சுக்லா 3.3 ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டு 17 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெடுகளை கைப்பற்றினார்.
அவருக்கு அடுத்தபடியாக பருணிகா சிசோடியா மற்றும் சோனம் யாதவ் ஆகியோர் அதிகபடியாக தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.