உத்தரப் பிரதேசின் நொய்டா செக்டார் 65 இல் அமைந்துள்ள மின்னணுவியல் நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 15 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 75 தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தில் உள்ளனர்,
மேலும் நிறுவனத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான சேத விபரங்கள் இன்னும் மதிப்பிடப்படவில்லை.