வெல்லவ, மரலுவாவ பகுதியில் தம்பதியர் மீது நேற்று (24) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் கணவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
தம்பதியினர் உடனடியாக குருணாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், 32 வயதான கணவர் உயிரிழந்துள்ளார்.
அவர் மரலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது 30 வயதான மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தம்பதியினர் அப்பகுதியில் தற்காலிகமாக வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர் பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
குற்றவாளியைக் கைது செய்வதற்கான விசாரணைகளை வெல்லவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.