ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் (Kotputli) 700 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுமியை மீட்கும் பணிகள் புதன்கிழமை (25) காலையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் 48 மணி நேரத்திற்கும் மேலாக சிறுமி சேத்னாவை மீட்கும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர்.
முதலில் தலா 10 அடி கொண்ட 15 இரும்பு கம்பிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்து சிறுமியை மீட்கும் முயற்சிகளை மீட்பு குழுவினர் மேற்கொண்டனர்.
எனினும் அந்த முயற்சிய பலனளிக்கவில்லை.
அவர்களின் ஆரம்ப திட்டங்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அதிகாரிகள் துழையிடம் இயந்திரங்களைப் பயன்படுத்தவும், செவ்வாய்க்கிழமை எலி சுரங்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழி தோண்டி சிறுமியை மீட்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதனிடையே, சிறுமிக்கு ஆக்ஸிஜன் வழங்குவதற்காக ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் குழாய் இறக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் நான்கு ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
கிராத்பூரில் உள்ள பதியாலி கி தானியில் வசிக்கும் சிறுமி, திங்கட்கிழமை (23) பிற்பகல் 2.00 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.
முதலில் அவர், சுமார் 150 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார்.
ஒரு தற்காலிக கருவியைப் பயன்படுத்தி, மீட்பு பணியாளர்கள் சிறுமியை 30 அடி வரை மட்டுமே இழுக்க முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.