இந்தியா அணியின் முன்னாள் தலைவரும் மூத்த வீரருமான விராட் கோலி அவுஸ்திரேலிய அணியின் 19 வயது இளம் வீரர் சாம் கோன்ஸ்டாஸ்-க்கு எதிராக செய்த செயல் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்து துடுப்பெடுத்தாடி வருகிறது.
இந்த ஆட்டத்ல் 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக அவுஸ்திரேலிய அணிக்காக களமிறங்கினார்.
அவர் பும்ராவை குறிவைத்து ஓட்டங்களை சேர்த்தார்.
பும்ராவின் ஓவர்களில் மட்டும் 33 பந்துகளில் 34 ஓட்டங்களை சேர்த்தார். 52 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
அவர் அதிக நம்பிக்கையுடன் அதிரடியாக ஆடி வந்த நிலையில் விராட் கோலி வேண்டுமென்றே அவரை இடித்தார்.
10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான் நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார்.
பின்னர், அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர்.
இதனால், விராட் கோலியின் செயலுக்கு எதிராக விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துள்ள நிலையில் அவர் மீது ஐசிசி தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.