இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் மெண்டிஸ் அனைத்து சாதனைகளையும் தகர்த்து, 2024 ஆம் ஆண்டில் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் ஆனார்.
மொத்தமாக அவர் 48 போட்டிகளில் 2 சதம், 11 அரை சதங்களுடன் 1860 ஓட்டங்களை குவித்துள்ளார்.
கடந்த நவம்பரில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அந்தப் போட்டியில் குசல் மெண்டிஸ் 143 ஓட்டங்களை எடுத்தார்.
ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அவர் பெற்றுக் கொண்ட அதிகபடியான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
37.20 என்ற திடமான துடுப்பாட்ட சராசரியுடன், அவர் 2024 இல் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தினார்.
குசல் மெண்டீஸுக்கு அடுத்தபாடியக 1771 ஓட்டங்களை குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாம் இடத்திலும், 1696 ஓட்டங்களை குவித்த பத்தும் நிஸ்ஸங்க மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.