2024ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடைபெறும் நேரத்தில் புதிய கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் 2025ஆம் ஆண்டை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளோம். 2024ல் கற்றுக்கொண்ட வாழ்க்கை பாடங்களோடு 2025ஆம் ஆண்டை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வரவேற்போம் என எமது செய்திப் பிரிவு மற்றும் தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகிறோம்
அத்துடன் நாடளாவிய ரீதியாக உள்ள மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நேற்றிரவு இடம்பெற்றன.
இதேவேளை, பசுபிக் பிராந்தியத்திலுள்ள கிரிபாட்டி தீவு, இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 3.30க்கு முதலாவதாக 2025 புத்தாண்டை வரவேற்றது.
கிரிபாட்டி தீவுக்கு பிறகு உலகின் முதல் நாடாக நியூசிலாந்து 2025 புத்தாண்டை வரவேற்றது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 க்கு அந்த நாட்டில் புத்தாண்டு பிறந்தது. அதனையடுத்து அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 2025 புத்தாண்டை வரவேற்றிருந்தன