இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான விடாமுயற்சியின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றிரவு எக்ஸ் தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்,
சில தவிர்க்க முடியாத காரணங்களால், “விடாமுயற்சி” திரைப்படம் பெங்கல் வெளியீட்டிலிருந்து பிற்போடப்பட்டுள்ளதாக கூறியது.
விடாமுயற்சி திரைப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன் மற்றும் ரெஜினா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைப்பதுடன் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார்.
இதனிடையே மார்க் ஆண்டனி புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார்.
குட் பேட் அக்லியும் பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நவீன் யெர்னேனி, புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளால் குட் பேட் அக்லியின் வெளியீட்டுத் திகதியை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில் தற்சமயம் லைகா புரொடக்ஷன்ஸ் விடாமுயற்சியின் வெளியீட்டை வேறு திகதிக்கு பிற்போட்டுள்ளதால், குட் பேட் அக்லி அதற்கு முன்னதாக வெளியாகுமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.