2025 ஆம் ஆண்டு புதன்கிழமை பிறக்க இருப்பதால் இது ஒரு அதிர்ஷ்ட ஆண்டாகவே கருதப்படுகிறது.
“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது” என்பார்கள்.
அது போல புதன் கிழமை அன்று இவ்வாண்டு துவங்க இருப்பதால், நீங்கள் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது சிறப்பான பலன்களை கொடுக்கும்.
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு விடயத்தை இந்த வருடம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று உத்வேகத்துடன் முயற்சி செய்தால் நிச்சயம் மற்ற வருடத்தை காட்டிலும், இவ்வருடம் கூடுதலாகவே நீங்கள் மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
புதன் புத்திகாரகன் என்பதால் புதன் கிழமையில் புதனுக்கு உரிய இந்த பொருளை வாங்குவது நல்லது.
புதனுக்கு உரியது பச்சை நிறம். பச்சை நிறத்தில் இருக்கும் பச்சை பயறு, புதனுக்கு உரிய தானியம்.
ஒரு கைப்பிடி நிறைய பச்சை பயறை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு அலசி சுத்தம் செய்து ஈரத்துடன் அப்படியே அதை ஒரு வெள்ளை துணியில் கட்டி பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள்.
இதை புத்தாண்டு துவங்கும் நாளைய நாளில் நல்ல நேரம் பார்த்து செய்யுங்கள்.
பின்பு இரண்டு நாட்கள் அதை முளை கட்ட விடுங்கள்.
புதன், வியாழன் ரெண்டு நாட்கள் முளை கட்டியதும் வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளில் அதை பிரித்து, ஓடும் நீரில் விட வேண்டும்.
உங்கள் வீட்டில் யார் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமோ, அவர்கள் இதை செய்ய வேண்டும்.
சிறிய குழந்தைகளாக இருந்தால் தாய் அல்லது தகப்பன் உதவியில் செய்யலாம்.
அதே போல குபேர லட்சுமி யோகத்தை கொடுக்க கூடிய ஆண்டாக இருப்பதால், இவ்வாண்டின் முதல் நாளில் முதல் பொருளாக வெந்தயம் வாங்கி வையுங்கள்.
வெந்தயத்தை வாங்கி அதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வையுங்கள்.
வெள்ளிக்கிழமை அன்று முளைகட்டிய வெந்தயத்தை கொண்டு போய் ஓடும் ஆற்றில் விட வேண்டும்.
நதி நீரில் இந்த தானியங்கள் அடித்து செல்லும் பொழுது, நம் வாழ்க்கையில் இதுவரை ஏற்பட்ட தடங்கல்களும், தடைகளும் நம்மை விட்டு அடித்து செல்லும் என்பது ஐதீகம்.
நம்மை பிடித்து வைத்திருந்த தரித்திரங்கள், பீடைகள் அனைத்தும் ஒழிந்து போகும்.
அது போல அன்றைய நாளில் பச்சரிசியும், வெல்லமும் கலந்து அருகில் மாடு இருந்தால் அந்த பசு மாட்டிற்கு தானம் கொடுக்க வேண்டும்.
பசு மாட்டிற்கு கொடுக்கப்படும் தானம் பித்ரு தோஷத்தை போக்க வல்லது.
ஆண்டின் துவக்கத்தில் பித்ரு தோஷம் போக்கும் இப்பரிகாரத்தை செய்யும் பொழுது பித்ருகளுடைய ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.