• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

Kavipriya S by Kavipriya S
2025/01/01
in ஆன்மீகம், பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேஷம்:
மேஷராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்டிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே! பரபரப்பான நாளாக இருக்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் வேலைகளை எடுத்துச் செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும்..
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணங்களைத் தவிர்க்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார் கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

கடகம்:
கடகராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படக்கூடும். இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். மனதில் தன்னம்பிக் கையுடன் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே! தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி:
கன்னிராசி அன்பர்களே! எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்ற வர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

துலாம்:
துலாராசி அன்பர்களே! உற்சாகமாகச் செயல்படுவீர்கள். குடும் பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்ற செலவு செய்ய நேரிடும் என்பதால், கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். இளைய சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் உதவியுடன் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். ஆனால், சக வியாபாரிகளால் மறைமுக தொல்லைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூர்களில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே! உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோச னையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக் கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக் காது. பாக்கித் தொகைக்காக வாடிக்கையாளருடன் சிறு சச்சரவு ஏற்படக்கூடும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும்

தனுசு:
தனுசுராசி அன்பர்களே! உற்சாகமான நாள். சகோதரர்கள் வகையில் அலைச்சலுடன் ஆதாயமும் இருக்கும். அவசர முடி வுகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு திடீர் பணவர வுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனை பயன் தருவதாக இருக் கும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணை மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்:
மகரராசி அன்பர்களே! எதிலும் அவசரமில்லாமல் செயல்படவேண்டிய நாள். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். வாழ்க்கைத்துணையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களால் பிரச் னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

கும்பம்:
கும்பராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். அன்றாடப் பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும் கணவன் – மனைவிக் கிடையே வீண் விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பது உற்சாகம் தரும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாலையில் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

மீனம்:
மீனராசி அன்பர்களே! புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்பதால், சிலருக்கு வீட்டிலும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவேண்டி வரும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயம் தருவதாக அமையும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரிபூரணமான வாழ்க்கை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கம்-பிரதமர்!

Next Post

16 புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

Related Posts

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக
இலங்கை

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

2026-01-25
அடுத்த மாதம் முதல் மீண்டும் போராட்டம்
இலங்கை

நாளை முதல் அரச வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டம்

2026-01-25
நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!
இலங்கை

நுவரெலியாவுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

2026-01-25
பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?
இலங்கை

பயங்கரவாதத்திலிருந்து  – அரசைப் பாதுகாப்பது: NPP தமிழ்மக்களுக்கு காட்டும் மாற்றம்?

2026-01-25
மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!
இலங்கை

மானிப்பாய் சபை அமர்வின் போது தூக்கி வீசப்பட்ட அறிக்கை!

2026-01-25
கொழும்பு புறக்கோட்டை  பகுதியில் ஒரு கொலைச் சம்பவம்
இலங்கை

மகாவோயா – பெரகல வனப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-01-25
Next Post
16 புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

16 புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!

வெளிநாட்டு வேலைவாய்ப்பில் கடந்த ஆண்டு சாதனை!

போலி கடவுச்சீட்டுடன் இரு இலங்கையர்கள் கைது!

போலி கடவுச்சீட்டுடன் இரு இலங்கையர்கள் கைது!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாம் கட்ட 4 வீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைப்பு

0
கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேக

0
கிரிபத்கொடையில் பயங்கரம்; 6 முறைகள் துப்பாக்கிப் பிரயோகம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

0
சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
மாத்தறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணர்களோடு சினேகபூர்வ துடுப்பாட்டத்தில் ஈடுபட வருகை

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.