இலங்கை வரலாற்றில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிகளவானோர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஆண்டாக 2024 ஆம் ஆண்டு பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2022 இல் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் புறப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும், கடந்த 2019 முதல் 2024 வரையான ஆறு வருடங்களில் மொத்தம் 1.3 மில்லியன் பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக SLBFE தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், 185,162 ஆண்களும் 127,674 பெண்களும் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான இலங்கைத் தொழிலாளர்கள் குவைத்துக்கு (77,546), ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு (51,550) சென்றுள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், தென் கொரியா (7098), இஸ்ரேல் (9665), ஜப்பான் (8665) ஆகிய நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளனர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியும் 2024 இல் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
நவம்பர் மாத இறுதியில் 6462 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அது பதிவாகியுள்ளன.