2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் வீரர்கள் ஏலத்தில் ஸ்ரேயஸ் ஐயரை இந்திய பெறுமதி 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியதுடன் ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
இதேவேளை 2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது