உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து உள்ளன நிலையில் விபத்துகளை குறைக்க சாலை விதிகளை கடுமையாக அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதில் இரு சக்கர வாகன சாரதிகள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்காக ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன சாரதிகளுக்கு பெட்ரோல் வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் போக்குவரத்து ஆணையாளர் பிரஜேஷ் நராயண் சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.
அத்துடன் சாலை பாதுகாப்பு தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில், விபத்துகள் அதிகரித்து வருவதாகவும் ஆண்டுக்கு 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது