உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர்
இன்னிலையில் தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர்.
சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்ததுடன் தைதிருநாளினை முன்னிட்டு இந்துக்களின் வீடுகள் சுத்தம் செய்து அலங்கரித்து வருகின்றனர்.
இதேவேளை தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது அதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்கின்றனர்.மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது