தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108 ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தி உள்ளார்.
அத்துடன் “ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சிகளால் தாம் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும்” பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எம்.ஜி.ஆரை புகழ்ந்து ஒரு வீடியோவையும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.