உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான நவோமி ஒசாகா (Naomi Osaka) வெள்ளிக்கிழமை (17) தனது அவுஸ்திரேலிய ஓபன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் காயத்துடன் விலகினார்.
மூன்றாவது சுற்று ஆட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை எதிர்கொண்ட ஜப்பானிய வீராங்கனை முதல் செட்டை 7-6(3) என்ற கணக்கில் இழந்தார்.
மற்றொரு மூன்றாவது சுற்று ஆட்டத்தில், முதல் நிலை வீராங்கனையான பெலாரஷ்ய வீராங்கனையும், இரண்டு முறை நடப்பு சாம்பியனுமான அரினா சபலெங்கா 7-6(5), 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் கிளாரா டவுசனைத் தோற்கடித்தார்.
ஆடவர் பிரிவு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜேக்கப் ஃபெர்ன்லியையும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-2, 6-4, 6-7(3) என்ற செட் கணக்கில் போர்ச்சுகலின் நுனோ போர்ஜையும் தோற்கடித்தார்.