மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மின்சாரக் கட்டணத்தை 20% குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வீட்டுப்பாவனையில் , 0 – 30 அலகுகளுக்கு 29 வீதமும், 31 – 60 அலகுகளுக்கு 28 வீதமும், 61 – 90 அலகுகளுக்கு 19 வீதமும், 91 – 180 அலகுகளுக்கு 18 வீதமும், 180 அலகுகளுக்கு மேல் 19 வீதமும் குறைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பொதுத் தேவை கருதிய மின் பாவனையாளர்களுக்கு 12 வீதமும், அரச நிறுவனங்களுக்கு 11 வீதமும், ஹோட்டல் துறைக்கு 31 வீதமும், வழிபாட்டுத்தலங்களுக்கு 21 வீதமும், தொழிற்துறைக்கு 30 வீதமும், வீதி விளக்குகளுக்கு 11 வீதமும் மொத்த விலைக் குறைப்பு 20 வீதம் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் ஆறு மாதங்களுக்கு புதிய கட்டண திருத்ததின் கீழ், கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என நடவடிக்கை எடுத்துள்ளது
இந்த விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது