நோர்வே கால்பந்து நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) வெள்ளிக்கிழமை (17) மான்செஸ்டர் சிட்டியுடன் ஒன்பதரை வருட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இது அவரை 2034 வரை கழகத்தில் வைத்திருக்க அனுமதிக்கும்.
இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர்,
அணிக்காக மேலும் முன்னோக்கிச் செல்வதற்கும், மேலும் வெற்றியை அடைய உதவுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
2022 இல் பொருசியா டார்ட்மண்டில் இருந்து வந்ததிலிருந்து 125 ஆட்டங்களில் 111 கோல்களை அடித்த நார்வே வீரர், தனது வாழ்நாள் முழுவதையும் மான்செஸ்டர் சிட்டியில் செலவிட ஒப்புக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார்.
ஹாலண்டின் ஒப்பந்தம் 2027 ஜூன் மாதத்துடன் காலாவதியாகின்றது.
எனினும் 24 வயதான நட்சத்திரம், கடந்த இரண்டு சீசன்களில் அதிக கோல்கள் அடித்ததற்காக லீக்கின் கோல்டன் பூட்டை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.