பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தனது மகன் ‘துக்ளக்‘ குறித்து ஊடகங்களுக்கு அளித்த செவ்வி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அண்மையில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் போதை பொருள் வழக்கொன்றில் கைது செய்யப்பட்டார். மெத் எனப்படும் போதைப் பொருளை அவரும் அவரது நண்பர்களும் விற்றதாக ஆதாரங்கள் உறுதியானதை அடுத்து அவரை அதிரடியாக போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இந்நிலையில் தனது மகன் கைது குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மன்சூர் அலிகான் பேசியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இதன்போது ‘என்னுடைய மகனை நானே பொலிஸாரிடம் பிடித்துக்கொடுத்தேன். அவர் சிகரெட் பிடிப்பாரா என்று கூட எனக்கு தெரியாது என்பதுதான் உண்மை. அவரை விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது எனது மகனிடம் தவறு செய்தாயா என்று கேட்டேன். அதற்கு அவர் ஆமாம் என்று கூறினான். உடனே அவரது கன்னத்தில் பளார் என அறைந்தேன் . என்னுடைய மகன் மட்டுமில்லை யார் செய்தாலும் தவறு தவறுதான். இப்போது பள்ளி குழந்தைகள் வரை கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுகிறார்கள்’ இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.