ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதி மன்ற நீதிபதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், நீதிபதிகள் மொஹிசா மற்றும் அலி ரசானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலில் பாதுகாவலர் ஒருவரும் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உயிரிழந்த நீதிபதிகள் தீவிர அடிப்படைவாதக் கொள்கைகளை பின்பற்றி, போராட்டக் குழுக்கள் மீது கடுமையான தீர்ப்புகளை வழங்கியவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.