காலியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் தனிபொல்கஹா பகுதியிலுள்ள கடையில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தீயை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதியிலுள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.